காவல்துறை மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்தமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாகப் பெயரிடுவதற்கு உயர் நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது.
குறித்த நியமனத்தைச் சவாலுக்கு உட்படுத்தி இளம் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த மனுவில் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பெயரிட அனுமதி கோரினார்.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதியைப் பிரதிவாதியாகக் குறிப்பிட அனுமதித்த மூவரடங்கிய நீதியரசர்கள் ஆயம், மனுவை எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளது.






