பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் கான்ஸ்டபிள் ஒருவர் உள்ளடங்களாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசபந்து தென்னகோனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதும் பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் மார்ச் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அவர் தலைமறைவாகியிருந்தார்.

அவர் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் விசேட பாதுகாப்புப் படையில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவரும், தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here