Friday, April 17, 2026
No menu items!

காவல்துறை மா அதிபர்

ஜகத் விதானவின் உயிருக்கு அச்சுறுத்தல்: அரசியல் காரணமல்ல – காவல்துறை மா அதிபர்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் அரசியல் காரணங்களால் அல்ல என காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுடனான ஜகத் விதானவின் தொடர்புகளே இந்த அச்சுறுத்தலுக்குக் காரணம் என ஆரம்ப விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த...

ஊழல் விசாரணைகள் தீவிரம் – ஊழல்வாதிகள் கலக்கமடைந்துள்ளனர்: பிரதி அமைச்சர் சுனில் வட்டகல!

கையூட்டல் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதால், பல ஊழல்வாதிகள் கலக்கமடைந்துள்ளதாக பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். அவர் மேலும், அரச நிதியை மோசடி செய்தவர்கள் நிச்சயமாக சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் வலியுறுத்தினார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து...

இலங்கை வரலாற்றில் மிகப்பெரியளவில் தரைவழியில் போதைப்பொருள் மீட்கப்பட்ட இடம் தங்காலை; காவல்துறை மா அதிபர்!

தங்காலையில்  நேற்றைய தினம் (செப்டெம்பர் 23, 2025)  இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தரைப்பகுதியில் அதிக அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய நேற்று ஊடகங்களிடம் தெரிவித்தார். நேற்று தங்காலையில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதலின் போது, மொத்தம் 635 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார். இதுவரை மாத்தறையில் கைப்பற்றப்பட்ட...

CIDயினால் கொழும்பு பிரதி காவல்துறை மா அதிபர் கைது !

அனுராதபுரம் - ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில், தமது மனைவி புதையல் தோண்டியமை தொடர்பாக ,கொழும்பு பிரதி காவல்துறை மா அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, குறித்த கொழும்பு பிரதி காவல்துறை மா அதிபரின் மனைவி மற்றும் 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் புதிய காவல்துறை மா அதிபராக, சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமன கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் நந்திக்க சனத் குமாநாயக்க புதிய காவல்துறை மா அதிபருக்கு ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று வழங்கி வைத்தார்.

37 ஆவது காவல்துறை மா அதிபர் நியமனம் தொடர்பில் கலந்துரையாடல்!

37 ஆவது காவல்துறை மா அதிபர் நியமனம் குறித்து கலந்துரையாடுவதற்காக அரசியலமைப்பு பேரவை நாளை கூடவுள்ளது. தேசபந்து தென்னகோன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, காவல்துறை மா அதிபர் பதவிக்கு, தற்போதைய பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயரை முன்மொழிந்துள்ளார். இந்த நிலையில், ஜனாதிபதியின் முன்மொழிவு தொடர்பில் கலந்துரையாடி இறுதி...

புதிய காவல்துறை மா அதிபர் நியமனத்திற்காக இன்று கூடவுள்ள அரசியலமைப்பு பேரவை!

நாட்டின் 37ஆவது காவல்துறை மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது. இதன்படி, அரசியலமைப்பு பேரவை இன்று பிற்பகல் 1.30 இற்கு நாடாளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளது. காவல்துறை மா அதிபர் பதவியிலிருந்து தேஷபந்து தென்னகோனை நீக்குவதற்காக, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாகச் சபாநாயகர் அனுப்பியுள்ள கடிதத்திற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார். அதன்படி, புதிய காவல்துறை மா...

தேசபந்து தென்னகோனுக்கு கொலை மிரட்டல்!

காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை கொலை செய்வதற்கான திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக தேசபந்து தென்னகோனுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் குழு உறுப்பினருமான கஞ்சிபானை இம்ரான் இதற்கான திட்டத்தை தீட்டியிருப்பதாக கூறப்படுகிறது. தேசபந்து தென்னகோன், காவல்துறை மா அதிபராக கடமையாற்றிய போது,...

நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ள தேசபந்து தென்னகோன்!

காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட இருவர் இன்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளனர். பிரதான நீதவான் அருணா இந்திரஜித் புத்ததாச அண்மையில் பிறப்பித்த உத்தரவிற்கமைய அவர்கள் மன்றில் முன்னிலையாகவுள்ளனர். 2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள விருந்தகம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன்,...

தேசபந்து தென்னகோனின் பதவி நீக்கம் தொடர்பான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

தேசபந்து தென்னகோனை காவல்துறைமா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குமாறு தெரிவித்து 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சபாநாயகருக்குப் பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்தனர். இந்த பிரேரணையில் அவரது தவறான நடத்தை, பதவியைத் தவறான முறையில் பயன்படுத்தியமை, காவல்துறைமா அதிபர் பதவியைப் பயன்படுத்தி தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை உள்ளிட்ட...
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img