Monday, May 25, 2026
No menu items!

கொட்டகலை

7 மில்லியன் ரூபாய் நிதி மோசடி: தனியார் நிறுவனம் ஒன்றின் முன்னாள் ஊழியர் கைது!

தனியார் நிறுவனம் ஒன்றின் முன்னாள் ஊழியர் ஒருவர் 7,037,400 ரூபாய் நிதி மோசடி தொடர்பாக களனி சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நிறுவனத்தின் செயல்பாடுகள் என்ற போர்வையில் தண்ணீர் வடிகட்டிகள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பெற்று, பொருட்களை விற்று, வருமானத்தை நிறுவனத்திற்கு அனுப்பத் தவறிவிட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து விசாரணைகள்...

குளத்தில் தவறி விழுந்த 17 வயது இளைஞன் மாயம்!

அட்டன் சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த 17 வயது இளைஞன் காணாமல் போயுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆறு நண்பர்களுடன் புகைப்படம் பிடிக்க சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொட்டகலை கேம்பிரிஜ் கல்லூரியில் சாதாரண தரம் கற்று பரீட்சை பெறுபேறுக்காக காத்திருந்த தமிழ்மாரன் என்ற இளைஞனே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞர் உள்ளிட 06 பேர் நேற்று...

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருள் கொண்டு சென்றவர்கள் கைது..!

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு கஞ்சா போதைப்பொருள் கொண்டு சென்ற மூன்று இளைஞர்கள் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொட்டகலை, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 மற்றும் 30 வயதிக்கிடைப்பட்டவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்த ஜே.வி.பி; ரணில் விக்கிரமசிங்க!

தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அச் சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். “ஐ.தே.க சார்பில் நான் உரையாற்றும் முதலாவது சந்திப்பு இதுவாகும். நாங்கள் வேறு இடங்களில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டாலும், நுவரெலியாவில் யானைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று...

நான் வாக்குறுதி அளிக்கவில்லை; கைவிரித்த ரணில்……!

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாவை வழங்குவதாக நான் உறுதிமொழியளிக்கவில்லை  என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, ”தொழில் அமைச்சின் திணைக்களம் குறித்த தொகையை ஒதுக்கியது. அதற்கு எதிராக சில கம்பனிகள் நீதிமன்றம் சென்றன. தற்போது குறித்த கம்பனிகள்...

தீ விபத்தில் சிக்கி பெண் ..!

 திம்புலபதன - கொட்டகலை பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் கொட்டகலை பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய பெண் என தெரிவிக்கப்படுகிறது. வீட்டின் அறையொன்றில் தீ பரவியதாகவும், தீயினால் தீக்காயங்களுக்கு உள்ளான பெண் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- Advertisement -spot_img

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...
- Advertisement -spot_img