திருகோணமலை
புதிய செய்திகள்
உந்துருளியில் பயணித்த ஒருவர் யானையுடன் மோதி உயிரிழப்பு!
திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் கன்னியா பகுதியில் உந்துருளியில் பயணித்த ஒருவர் யானையுடன் மோதுண்டு உயிரிழந்தார்.
வவுனியா – புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகத் தெரியவந்துள்ளது.
<!--
-->
புதிய செய்திகள்
ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்த நபர் மரணம்!
ஹபரண - திருகோணமலை பிரதான வீதியில் ஹபரண பகுதியில் ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்து 27 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து, ஹபரண நகரப் பகுதியைக் கடந்து சென்றபோது, ஏப்ரல் 11 ஆம் திகதி மதியம் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
பாதிக்கப்பட்டவர் தெளிவற்ற சூழ்நிலையில் பேருந்தின் முன் கதவிலிருந்து...
உள்நாட்டுச்செய்திகள்
இலங்கையில் முதல் முறையாக கடல் நீருக்கடியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம்..!
இலங்கையில் முதல் முறையாக, திருகோணமலைக் கடலில் நீருக்கடியில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவிற்கான விளையாட்டுக்கள் நடைபெற்றன.
இலங்கை கடற்படையின் மலிமா ஹாஸ்பிடாலிட்டி சர்வீசஸ் (MHS) இன் மலிமா டைவிங் கிளப், கடற்படை டைவிங் பிரிவுடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு, கலாச்சார விழாக்களை கடலுக்கடியில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையை உலகத் தரம் வாய்ந்த டைவிங் இடமாக...
உள்நாட்டுச்செய்திகள்
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவியாக புனிதவதி துஷ்யந்தன் தெரிவு!
திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவியாக திருமதி புனிதவதி துஷ்யந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 25 ஆம் திகதி நடைபெற்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டத்தில் 2025/2026 ஆம் ஆண்டுக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவி யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
யாழ்ப்பாணம் காரை நகரை பிறப்பிடமாகக் கொண்ட இவர், பொன்னம்பலம் - ராணி தேவி தம்பதியின் கனிஷ்ட புதல்வியாவார்.
யாழ் வேம்படி மகளிர்...
புதிய செய்திகள்
தம்பதியினரை மிரட்டி கொள்ளையடித்து சென்ற இருவர் கைது!
கார், பணம் மற்றும் நகைகளைத் திருடியதற்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (16) மதியம், திருகோணமலை சங்கமித்தா கடற்கரைக்கு அருகிலுள்ள மான் பார்க்கும் இடத்திற்கு ஒரு ஜோடி வந்திருந்தது. காரில் வந்த மூன்று நபர்கள், தம்பதியினரை மிரட்டி, அவர்களின் கார், பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.
திருகோணமலை காவல் நிலையத்தில் செய்யப்பட்ட...
புதிய செய்திகள்
திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவர் தெரிவு..!
திருகோணமலைப் பொது நூலக கேட்போர்கூடத்தில் திருகோணமலை தமிழ்ச் சங்கத்திற்கான புதிய செயற்குழு சனிக்கிழமை (15) தெரிவு செய்யப்பட்டது.
சுமார் பத்து ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த திருக்கோணமலைத் தமிழ்ச் சங்கம் கேணிப்பித்தன் (அருளானந்தம்) ஐயாவின் மூலம் மீள உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தலைவராக திருமலை நவம்(மேனாள் பள்ளி முதல்வர்), செயலாளராக சி. காண்டீபன் (பள்ளி ஆசிரியர்) பொருளாளராக மு.மு.மு. முகைஸ் (பள்ளி...
புதிய செய்திகள்
பாட்டிமாரை கொன்ற 15 வயது சிறுமி-நன்னடத்தை நிலைய காவலில் ..!
மூதூர் தர்கா நகரில் தனது பாட்டி மற்றும் பாட்டியின் மூத்த சகோதரியைக் கொன்றதாகக் கூறப்படும் 15 வயது சிறுமியை கம்பஹா ரன்முத்துகலை நன்னடத்தை நிலைய காவலில் வைக்குமாறு மூதூர் நீதவான் நஸ்லிம் மொஹமட் பௌஸான் நேற்று (15) உத்தரவிட்டார்.
மூதூர் தர்கா நகரைச் சேர்ந்த சிறிதரன் இராஜேஸ்வரி (வயது 68) மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியரும் ஓய்வுபெற்ற...
புதிய செய்திகள்
பாட்டிமாரை கொலை செய்த சிறுமி- பகிரங்க வாக்குமூலம்..!
மூதூர் - தாஹா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்று (14) அதிகாலை சகோதரிகளான பெண்கள் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி. தஸ்னீம் பௌசான், சட்ட வைத்திய அதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் விஜயம் மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த சம்பவத்தில் சிறிதரன் ராஜேஸ்வரி...
புதிய செய்திகள்
மூதூரில் பேருந்து லொரியுடன் மோதியதில் 33 பேர் காயம்..!
திருகோணமலை மூதூரில் பேருந்து பாரவூர்தியுடன் மோதியதில் 33 பேர் காயமடைந்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது மினுவாங்கொடையிலிருந்து சேருவிலவுக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகள்
ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த கந்தளாய் விவசாயிகள்..!
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் நீர்ப்பாசனம் பொறியலாளர்குட்பட்ட பகுதியில் பெரும்போக நெற் செய்கை அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் குளத்தின் நீரினால் சுமார் 22 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தற்போது பேராறு முதலாம் கண்டம் வான் எல,ரஜஎல,தம்பலகாமம் போன்ற பகுதியில் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுவுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த அரசாங்கத்தை விட இந்த அரசாங்கத்தில் நெல்லின்...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


