Monday, August 24, 2026
No menu items!

திஸ்ஸ விகாரை

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்…!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், குறித்த போராட்டமானது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டமானது, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சட்டவிரோதமாக அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்..!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்று (22) ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டமானது இன்று (23) மாலை 6:30 மணிவரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த போராட்டமானது தொடர்ச்சியாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இடம்பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த  போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயது 40: பிரதி அமைச்சர்

முச்சக்கரவண்டி பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே...
- Advertisement -spot_img