Sunday, November 8, 2026
No menu items!

நா.வேதநாயகன்

ஜெனிவா சமவாயங்களின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட கலந்துரையாடல்..!

ஜெனிவா சமவாயங்களின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சுவிஸர்லாந்து தூதரகம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்வும், கண்காட்சியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று திங்கட்கிழமை (16.12.2024) அன்று இடம்பெற்றது. அதிதியாகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கண்காட்சியை நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தார். இந்த...

நீண்ட கால அபிவிருத்தித் திட்டங்கள் – முன்னாயத்தக் கூட்டம் யாழில்..!

வடக்கு மாகாணத்துக்கான நீண்ட கால அபிவிருத்தித் திட்டங்களை தயாரிப்பது தொடர்பான முன்னாயத்தக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை (13.12.2024) இடம்பெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில் அறிமுகவுரை நிகழ்த்திய ஆளுநர், தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் வடக்கு மாகாணத்தில் மிகப்பெரிய அபிவிருத்தியை முன்னெடுக்க வாய்ப்புள்ளது. எனவே மாகாணத்தில் மிகப்பெரிய நிதி ஒதுக்கீட்டில்...

யாழ். மாவட்டம் கூட்டுறவுத்துறையில் வீழ்ச்சி..!

யாழ்ப்பாண மாவட்டம் கூட்டுறவுத்துறை இன்று வீழ்ச்சியடைந்திருக்கின்றது. காலத்துக்கு ஏற்றவகையில் எங்களை நாங்கள் மாற்றியமைப்பதன் ஊடாகவே கூட்டுறவுத்துறையை தக்கவைக்க முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்திக்கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் நடத்திய 102ஆவது சர்வதேச கூட்டுறவுதின விழா, சமாச கூட்டுறவாளர் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை காலை (13.12.2024)...

மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தாலே பிரச்சினைகள் தீர்ந்து விடும் – வேதநாயகன் தெரிவிப்பு..!

மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தால் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும் எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் அரச திணைக்களங்கள் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும் என கேட்டுக்கொண்டார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் தின நிகழ்வு ரில்கோ ஹோட்டலில் நேற்று வியாழக்கிழமை (12.12.2024) மாலை...

சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் தகவல்கள் குவிகின்றன – வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு..!

வடக்கு மாகாணத்தில் வெள்ள வாய்க்கால்களை மறித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்தமையைத் தொடர்ந்து அதிகளவிலான தகவல்கள் எமக்குக் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு அனுப்பி அவர்கள் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியிருக்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கடந்த மாதம் இடம்பெற்ற வெள்ள இடர்...

மாற்றாற்றலுடையவர்கள் ஒருபோதும் நிவாரணம் தருமாறு எங்களை அணுகுவதில்லை – நா.வேதநாயகன் தெரிவிப்பு..!

மாற்றாற்றலுடையவர்கள் ஒருபோதும் நிவாரணம் தருமாறு எங்களை அணுகுவதில்லை. அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்பதையே விரும்புகின்றார்கள். இதை சிறந்ததொரு முன்னுதாரணமாக நாங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். சர்வதேச மாற்றாற்றலுடையோர் தினமும் புதுப்பிரவாகம் நூல் வெளியீடும், யாழ்ப்பாண பிரதேச செயலக திறந்தவெளி அரங்கில் செவ்வாய்க்கிழமை (03.12.2024) இடம்பெற்றது. பிரதேச செயலர்...

வடக்கு மாகாண முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் – நா.வேதநாயகன் தெரிவிப்பு..!

வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், யாழ் வணிகர் கழகப் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். யாழ் வணிகர் கழகம் தலைவர் இ.ஜெயசேகரன் தலைமையிலான குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (29.11.2024) மாலை சந்தித்துக் கலந்துரையாடினர். யாழ். நகரில் அமைந்துள்ள புதிய...
- Advertisement -spot_img

Latest News

எம்.பியின் 39 ட்ரோன்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு 

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டு வந்த 39 ட்ரோன்களை தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படும் வரை...
- Advertisement -spot_img