சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டு வந்த 39 ட்ரோன்களை தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படும் வரை இலங்கை சங்கத்தால் விடுவிக்கப்படவில்லை தெரிவிக்கப்படுகிறது.

தேவையான ஒழுங்குமுறை அனுமதிகள் சமர்ப்பிக்கப்படாமை காரணமாக ட்ரோன்கள் தடுத்து வைக்கப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவ தெரிவித்தார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணையம் (TRC) மற்றும் பாதுகாப்பு அமைச்சு (MoD) ஆகியவற்றிடமிருந்து அனுமதிகளை பெற்று சமர்ப்பிக்குமாறு எம்.பி.க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here