Sunday, June 28, 2026
No menu items!

புளியம்பொக்கனை

இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்பு – விசாரணை தீவிரம்..!

கிளிநொச்சி A.35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கனை பகுதியில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. A 35 பிரதான வீதியின் புளியம்பொக்கனை பகுதியில் அமைந்துள்ள பாலத்திலேயே குறித்த இரண்டு ஆண்களின் சடலங்களும் இனங்காணப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆபத்தான நிலையில் காணப்படும் முல்லைத்தீவு பரந்தன் ஏ 35 வீதியில் உள்ள பாலம்…!

முல்லைத்தீவு பரந்தன் ஏ 35 வீதியில் உள்ள வட்டுவாகல் பாலம் மற்றும் புளியம்பொக்கனை பாலம் ஆகிய இரு பாலங்களும் பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாத வர்ணமிடப்படாது ஆபத்தான நிலையில் காணப்படுவதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதுடன் உயிரிழப்புக்களும் இடம்பெற்று வருகின்றன. முல்லைத்தீவு பரந்தன் ஏ 35 வீதியில் மிக நீண்ட காலமாக காணப்படும் பாலம் கடந்த 2009 ஆம்...

அடிகாயங்களுடன் ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் – கிளிநொச்சியில் பரபரப்பு

கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் உள்ள நெத்தலியாற்றில் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. புளியம்பொக்கனை பகுதியில் உள்ள முசிலம்பிட்டியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தில் அடிகாயங்களும் காணப்படுவதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மரணம் தொடர்பாக நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம், உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிசார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img