முல்லைத்தீவு பரந்தன் ஏ 35 வீதியில் உள்ள வட்டுவாகல் பாலம் மற்றும் புளியம்பொக்கனை பாலம் ஆகிய இரு பாலங்களும் பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாத வர்ணமிடப்படாது ஆபத்தான நிலையில் காணப்படுவதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதுடன் உயிரிழப்புக்களும் இடம்பெற்று வருகின்றன.

முல்லைத்தீவு பரந்தன் ஏ 35 வீதியில் மிக நீண்ட காலமாக காணப்படும் பாலம் கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான யுத்தம், 2004 ஆம் ஆண்டுக்கான ஆழிப்பேரலை அனுஷம் என்பவற்றால் கடுமையாக சேதத்துக்கு உள்ளாகியது.

தற்போது குறித்த பாலம் சிறுசிறு திருத்த வேலைகள் செய்யப்பட்டு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டது. குறித்த பாலத்தின் தொடர்ப பணிகளின் அவசியம் குறித்து கடந்த 2013ஆம் ஆண்டு முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறுகின்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் மற்றும் மாகாண சபை ஆகியவற்றில் நடந்த கலந்துரையாடல்களிலும் இந்த விடயம் பற்றி கோரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில் அதற்கான அமைச்சரவை தீர்மானங்களும் கொண்டுவரப்பட்டு அதற்கான புனரமைப்பதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் குறித்த பாலத்தின் பல இடங்களில் உடைவுகள் ஏற்பட்டு சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது உடன் உயிரிழப்புகளும் இடம்பெற்று வருகின்றன. இதேபோன்று குறித்த வீதியில் வெளிநாட்சி புளியம்பக்கடை சந்திக்கு அண்மித்த பகுதியில் உள்ள பாலமானது கடந்த 2021 ஆம் ஆண்டில் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை அந்த பணிகள் நிறைவடையாமல் காணப்படுகின்றது.

இதனால் தற்காலிக பாலத்தின் இரு பகுதிகளிலும் 15 க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதுடன் இரண்டு உயிரிழப்புக்களும் நிகழ்ந்துள்ளன. வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் போக்குவரத்து பாதையாகவும் உள்ள குறித்த வீதியினை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here