Friday, November 6, 2026
No menu items!

பொது வைத்தியசாலை

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு !

குறித்த இளைஞன் வீதியால் சென்று கொண்டிருந்த போது  டிப்பர்  வாகனம் மோதிய நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியிலிருந்து வட்டக்கச்சி செல்லும் வீதியின் பன்னங்கண்டி பாலத்திற்கு அருகாமையில் இன்று(19.09.2024) அதிகாலை  இடம்பெற்ற விபத்திலேயே அந்தோனி அல்பிரட் -அனுஷன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார் என பொலிசார் தெரிவிக்கின்றனர். விபத்தை ஏற்படுத்திய வாகனம் மற்றும் சாரதியை பொலிசார் கைது செய்துள்ளனர். இவ் விபத்து...

மன்னார் உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து!

மன்னார் உயிலங்குளம் பகுதியில் கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 03 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தானது நேற்று (27)மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மன்னார்- மதவாச்சி பிரதான வீதி ,உயிலங்குளம் பகுதியில் நேர் எதிரே வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாகியதில்  மோட்டார் சைக்கிள் மற்றும் கனரக வாகனத்தில்...

அடுத்த கட்ட நகர்வை நோக்கி பயணிக்கும் மரியராஜ் சிந்துஜாவின் வழக்கு….!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியான இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதம் மத்திய சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் குழந்தையைப் பிரசவித்த 27 வயதான மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரி...

வைத்தியர் அர்சுனாவுக்கு பிணை மனு நிராகரிப்பு-தொடர்ந்து விளக்கமறியல் உத்தரவு!

மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுமதியின்றி நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் மகபேற்று வைத்தியர் அறைக்குள் நுழைந்து புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்சுனாவை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று திங்கட்கிழமை( 5) உத்தரவிட்டுள்ளார். இன்றைய தினம் திங்கட்கிழமை (5) நகர்தல் பத்திரம் ஊடாக வைத்தியர் அர்சுனா வழக்கு விசாரணைக்கு எடுத்துக்...

வைத்தியரின் பொறுப்பற்ற செயற்பாட்டால் உயிரிழந்த பெண்; மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி  பட்டதாரி இளம் குடும்ப பெண் திருமதி மரியராஜ் சிந்துஜா (வயது-27 ) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவத்திற்கு அன்றைய தினம் விடுதிக்கு பொறுப்பாக இருந்த வைத்தியரின் பொறுப்பற்ற செயற் பாட்டால் குறித்த   பட்டதாரி இளம் குடும்ப பெண்ணை கொலை செய்து விட்டனர். அவர்கள்...

மன்னார் மாவட்ட பொது  வைத்தியசாலையினுள்  அனுமதியின்றி  நுழைந்த  வைத்தியர் அர்ச்சுனா!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினுள்  வெள்ளிக்கிழமை (2) இரவு அனுமதியின்றி நுழைந்த பெண்கள் மகபேற்று விடுதிக்குள்  பணியாற்றிய  வைத்தியருக்கு இடையூறு விளைவித்ததுடன் வைத்தியரின் அறைக்குச்சென்று அனுமதி இன்றி புகைப்படங்கள் வீடியோ எடுத்தமை தொடர்பில் மன்னார் பொலிஸில் வைத்தியர் அர்சுனாவிற்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். இந் நிலையில் வைத்தியர் அர்ச்சுனாவுடன் வைத்தியசாலைக்குள் நுழைந்த இரண்டு யூரிப் சமூக வலைத்தள...

ஹோட்டலில் தொழில் புரியும் ஊழியர்கள் சுற்றுலா சென்ற பஸ் பாரிய விபத்து!

நுவரெலியாவிலிருந்து திருகோணமலை நோக்கி சுற்றுலா சென்ற அதிசொகுசு பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தானது இன்று வியாழக்கிழமை (11) அதிகாலை நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் லபுக்கலை பகுதியில்  இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருகையில், அதிசொகுசு தனியார் பஸ் பாதையை விட்டு விலகி அருகில் இருந்த பாதுகாப்பு இரும்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா கிரேன் ஹோட்டலில் தொழில்...

மாத்தறை வைத்தியசாலையின் செயலுக்கு எதிராக நீதவான் பிறப்பித்த அதிரடி உத்தரவு….

மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த சிசுவின் அடையாளத்தை உறுதிப்படுத்த டி. என். ஏ. பரிசோதனையை முன்னெடுக்குமாறு மாவட்ட பிரதான நீதவான் அருண புத்ததாச இன்றையதினம் (28) உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் மாத்தறை வெலிகம பகுதியைச் சேர்ந்த 24 வயதான காவிந்த்யா மதுஷானி என்ற பெண்  வைத்தியசாலையில் கடந்த 22ஆம் திகதி குழந்தையை...
- Advertisement -spot_img

Latest News

 உரிமை மீறல் பிரச்சினைகளை நிராகரித்த சபாநாயகர்

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்த பாராளுமன்ற உரிமை மீறல் தொடர்பான கேள்விகளை எழுப்புவதற்கான ஐந்து கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலே இன்று (06)...
- Advertisement -spot_img