மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினுள்  வெள்ளிக்கிழமை (2) இரவு அனுமதியின்றி நுழைந்த பெண்கள் மகபேற்று விடுதிக்குள்  பணியாற்றிய  வைத்தியருக்கு இடையூறு விளைவித்ததுடன் வைத்தியரின் அறைக்குச்சென்று அனுமதி இன்றி புகைப்படங்கள் வீடியோ எடுத்தமை தொடர்பில் மன்னார் பொலிஸில் வைத்தியர் அர்சுனாவிற்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

இந் நிலையில் வைத்தியர் அர்ச்சுனாவுடன் வைத்தியசாலைக்குள் நுழைந்த இரண்டு யூரிப் சமூக வலைத்தள பதிவாளர்கள் உள்ளடங்களாக அத்துமீறி நுழைந்த அனைவரையும் கைது செய்ய மன்னார் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்சுனா இராமநாதன் இன்றைய தினம் சனிக்கிழமை மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த வைத்தியரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதேவேளை குறித்த வைத்தியருடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளரின் அனுமதி இன்றி உள்நுழைந்தவர்களையும் கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்த மன்னார் நீதவான் காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here