நுவரெலியாவிலிருந்து திருகோணமலை நோக்கி சுற்றுலா சென்ற அதிசொகுசு பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தானது இன்று வியாழக்கிழமை (11) அதிகாலை நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் லபுக்கலை பகுதியில்  இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருகையில்,

அதிசொகுசு தனியார் பஸ் பாதையை விட்டு விலகி அருகில் இருந்த பாதுகாப்பு இரும்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா கிரேன் ஹோட்டலில் தொழில் புரியும் ஊழியர்கள் சுற்றுலா சென்ற பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது பஸ்ஸில் பயணம் செய்த சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 42 பேர் காயமடைந்துள்ளதாகவும் இவர்கள் அனைவரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

 விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here