Saturday, November 7, 2026
No menu items!

பொலிஸார்

போதைப்பொருள் வாங்க பணம் கொடுக்காததால் தாயை அடித்துக் கொன்ற மகன்..!

போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் கொடுக்காத தாயை அடித்து கொலை செய்த மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் கொழும்பு, தெமட்டகொடை, ஆராமய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தெமட்டகொடை, ஆராமய பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய தாயொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று, சந்தேக நபரான மகன் போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் கேட்டு தனது தாயுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறின் போது...

அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான பொருட்கள் திருட்டு..!

இரத்தினபுரி - பெல்மடுல்ல, மீகஹகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர் ஒருவர் வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து சடலத்தை வாயிற்கதவுக்கு அருகில் உள்ள மரத்தில் கட்டி வைத்துவிட்டு பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றுள்ளதாக பெல்மடுல்ல பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (18) காலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் பெல்மடுல்ல, மீகஹகொட பிரதேசத்தைச்...

கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திவிட்டு சந்தேகநபர் தப்பியோட்டம்..!

யாழ். தெல்லிப்பழையில் கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது சந்தேகநபர் ஒருவர் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (18/03/2025) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், சந்தேக நபரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. நீதிமன்றத்தின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக தெல்லிப்பழை பொலிஸார் குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கு சென்றனர். இதன்போது, சந்தேகநபர் தகாத வார்த்தைப்...

மெகசின் சிறைச்சாலை கைதியின் மரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பம்..!

சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சக கைதிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் கொழும்பு மெகசின் சிறைச்சாலை கைதியின் மரணம் தொடர்பாக பொரளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மஹரகம பொலிஸாரால் கைதான சந்தேகநபர் கடந்த மாதம் 23 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் இரு அதிகாரிகள், போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் அந்த நபரை...

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

மொரட்டுவை பொலிஸ் பிரிவின் தந்தேனியவத்த  பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16/03/2025) பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட  சோதனை நடவடிக்கையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய  கட்டுபெத்த பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இந்த கைது நடவடிக்கையின் போது  05 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், சந்தேக நபர் இன்று திங்கட்கிழமை...

இ.போ.ச பேருந்து மரத்துடன் மோதி விபத்து – 12 பேர் காயம்..!

சிலாபம் – புத்தளம் வீதியில் பந்துலு ஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (3/17/2025) காலை நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்புக்குச் சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலுள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பேருந்து ஓட்டுநர்...

வீடொன்றிலிருந்து மர்மமான முறையில் தம்பதியினர் சடலமாக மீட்பு..!

பொகவந்தலாவ தெரேசியா தோட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (3/16/2025) இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொது மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளனர். இரண்டு சடலங்கள் கிடக்கும் அருகாமையில்...

சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் பொலிஸாருடன் நட்பு – ஆளுநர் குற்றச்சாட்டு..!

சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் பொலிஸாருடன் நட்பாக இருப்பதால், பொலிஸாரிடம் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு மக்கள் அஞ்சுகின்றனர். இது ஆபத்தான நிலைமை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் 15ஆவது ஆண்டு நிறைவு விழா, கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி பயிற்சி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை (16.03.2025) அறக்கட்டளையின் தலைவரும்,...

குதிரைகளுக்கு குளிர்கால சூழலை ஏற்படுத்த நடவடிக்கை..!

இந்நாட்களில் கடும் வெப்பம் நிலவி வருவதால், பொலிஸ் குதிரைப்படை பிரிவு குதிரைகளுக்கு குளிர்கால சூழலை ஏற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தவிர இந்த குதிரைகளுக்கு தேவையான மருந்து மற்றும் உணவு வழங்குவதில் காவல் துறையினர் அக்கறை காட்டி வருகின்றனர். இந்த குதிரைகள் மிகவும் குளிரான நாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படுவதால், இந்த குதிரைகளை...

மாணவனிடம் பணம் கொள்ளையடிக்க முயன்ற நபருக்கு நேர்ந்த கதி..!

கொஹுவல பகுதியில் பள்ளி மாணவனின் பணத்தை கொள்ளையடித்த நபர் ஒரு குழுவினரால் கற்களால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டதாக கொஹுவல பொலிஸார் தெரிவித்தனர். கொஹுவல பொலிஸ் பிரிவின் மல்வத்த வீதி மற்றும் எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மாவத்தை சந்திக்கு அருகில் பள்ளி மாணவன் ஒருவனின் பணம் கொள்ளையடிக்கப்படுவதை நேரில் பார்த்த ஒரு குழு, பணத்தை பறிக்க முயன்றவரை கற்களால் தாக்கி...
- Advertisement -spot_img

Latest News

தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிக்கிறது. இன்று (06) முதல் இந்த விசேட போக்குவரத்து...
- Advertisement -spot_img