போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் கொடுக்காத தாயை அடித்து கொலை செய்த மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் கொழும்பு, தெமட்டகொடை, ஆராமய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

தெமட்டகொடை, ஆராமய பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய தாயொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தன்று, சந்தேக நபரான மகன் போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் கேட்டு தனது தாயுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தகராறின் போது சந்தேக நபரான மகன் தனது தாயை அடித்து கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான மகன் போதைப்பொருளுக்கு அடிமையானர் என பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 46 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here