பொகவந்தலாவ தெரேசியா தோட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (3/16/2025) இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொது மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளனர்.

இரண்டு சடலங்கள் கிடக்கும் அருகாமையில் நஞ்சு போத்தல் இருந்ததாகவும், சடலமாக மீட்கப்பட்ட பெண் சிறிது காலம் கொழும்பு பகுதியில் கூலி தொழில் செய்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இருந்து தனது வீட்டுக்கு வருகை தந்து நான்கு நாட்கள் கடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்ததோடு, இந்ந இரண்டு சடலங்கள் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட கணவன் 38 வயதுடைய சின்னையா விஜயகுமார் எனவும் 37வயதுடைய பெருமாள் கௌரி எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இருவரின் சடலங்களும் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here