Sunday, November 8, 2026
No menu items!

பொலிஸார்

சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூவர் கைது..!

பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர்கர் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலதொட்டஎல்ல பிரதேசத்தில் பண்டாரவளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (30.11.2024) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26, 32 மற்றும்...

மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு..!

ஹெட்டிபொல - வெடியேகெதர பிரதேசத்தில் வயல்வௌியில் நபரொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹல்மில்லவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மரணம் நிகழ்ந்த விதம் தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை. சடலம் நீதவான் விசாரணைகளுக்கு பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக குளியாப்பிட்டிய மருத்துவமனையின் பிரேத அறையில்...

7 கஞ்சா தோட்டங்கள் சுற்றிவளைப்பு – 8 பேர் கைது..!

ஹம்பாந்தோட்டை, லுணுகம்வெஹெர காட்டுப் பகுதியில் 08 1/2 ஏக்கர் நிலப்பரப்பில் 07 கஞ்சா தோட்டங்கள் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டதோடு, உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் 08 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தல பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (29.11.2024) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தனமல்வெவ, சூரியவெவ பிரதேசங்களை சேர்ந்த...

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான “மிதிகம ருவனுக்கு” விளக்கமறியல்..!

பாதாள உலக கும்பலின் தலைவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான “மிதிகம ருவன்” என்று அழைக்கப்படும் ஜயசேகர விதானகே ருவன் சாமர என்பவரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (29.11.2024) உத்தரவிட்டுள்ளது. “மிதிகம ருவன்” என்பவர் பாதாள உலக கும்பலின்...

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது..!

அம்பன்பொல - நெகுன்னேவ பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பன்பொல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதான நபர் 63 வயதுடைய அம்பன்பொல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பன்பொல பொலிஸார்...

காட்டு யானை தாக்கியதில் வயோதிப பெண் உயிரிழப்பு..!

அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹாசேனகம பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கலென்பிந்துனுவெவ  பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (29.11.2024) இரவு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மஹாசேனகம பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய வயோதிப  பெண் ஆவார். இந்த வயோதிப  பெண் காட்டு யானை தாக்கி காயமடைந்துள்ள நிலையில் அநுராதபுரம்...

பூசகரைத் தாக்கி பணம் மற்றும் நகை அபகரித்த குழு கைது..!

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடிப் பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தில் வைத்து கடந்த புதன்கிழமை பூசகரைத் தாக்கி பணம்,நகை அபகரித்த குழுவை சாவகச்சேரிப் பொலிஸார் (29.11.2024) வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். இதன்போது பூசகரிடம் இருந்து பறிக்கப்பட்ட ஒன்றரைப் பவுண் சங்கிலி,பூசகரிடம் பறிக்கப்பட்ட நாற்பதாயிரம் ரூபாய் பணம் மற்றும் பூசகருடைய சங்கிலியை விற்றுப் பெற்ற இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம்...

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு!

அநுராதபுரம், கல்கிரியாகம பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (27) மின்சாரம் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்தனர். கல்கிரியாகம , புப்போகம பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது வீட்டில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியில் மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ள நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை...

மனைவியை கத்தியால் குத்திய கணவன்!

குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி வழங்கிய முறைப்பாட்டை விசாரிப்பதற்கு பொலிஸ் நிலையம் சென்ற கணவன் தனது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவம் கேகாலை, மாவனல்லை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, 21 வயதுடைய மனைவி, மாவனல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய கணவன் தொடர்பில் மாவனல்லை...

வழமைக்கு திரும்பியுள்ள ஏ9 வீதி !

சீரற்ற வானிலை காரணமாகப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் ஏ9 வீதி தற்போது மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். ஓமந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நொச்சிமோட்டை மற்றும் ஓமந்தை நகரம் ஆகிய பகுதிகளில் ஏ9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவில் வெள்ள நீர் வழிந்தோடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது வெள்ள நீர் குறைவடைந்துள்ளதால் யாழ்ப்பாணம் ஏ9...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img