ஹம்பாந்தோட்டை, லுணுகம்வெஹெர காட்டுப் பகுதியில் 08 1/2 ஏக்கர் நிலப்பரப்பில் 07 கஞ்சா தோட்டங்கள் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டதோடு, உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் 08 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தல பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (29.11.2024) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தனமல்வெவ, சூரியவெவ பிரதேசங்களை சேர்ந்த 29 – 65 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

சந்தேக நபர்களிடமிருந்து 04 உள்நாட்டுத் துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்கான மேலதிக விசாரணைகளை லுணுகம்வெஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here