குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி வழங்கிய முறைப்பாட்டை விசாரிப்பதற்கு பொலிஸ் நிலையம் சென்ற கணவன் தனது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவம் கேகாலை, மாவனல்லை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

21 வயதுடைய மனைவி, மாவனல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய கணவன் தொடர்பில் மாவனல்லை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரிப்பதற்காகக் கணவனும் மனைவியும் கடந்த 26 ஆம் திகதி மாவனல்லை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது,  கணவன் தனது கையில் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தி ஒன்றினால் மனைவியின்  கழுத்து மற்றும் வாய் பகுதிகளை குத்தி காயப்படுத்தியுள்ளார்.

படுகாயமடைந்த மனைவி மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here