Saturday, November 7, 2026
No menu items!

பொலிஸார்

எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம்..!

கல்கிஸ்ஸை, ஹுலுடகொட பகுதியிலுள்ள ஒரு இடத்தில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில், ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக இரண்டு பேரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரு முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இரத்மலானை மஹிந்தராம வீதியில் வசித்து வந்த 23 வயதுடைய கவிந்த கயாஷன் ரணவக்க...

மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவர் கோடரியால் தாக்கப்பட்டு கொலை!

மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபர் கோடரியால் தாக்கிக் கொலை செய்யப்பட்டதாக லுணுகம்வெஹெர பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டதில் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (30/04/2025) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் லுணுகம்வெஹெர, அக்கரகல்கொட பகுதியைச் சேர்ந்த 67 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. அந்த நபர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த...

கொழும்பில் பெண்ணொருவரை கொலை செய்து துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசிய சம்பவம்!

கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ் வீதி, நவகம்புர பிரதேசத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் இரண்டாவது கணவரும் மருமகனும் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, ஸ்டேஸ் வீதி, நவகம்புர பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவர் ஏப்ரல் 22 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக...

கடுகதி ரயில் முன்பாக பாய்ந்து ஒருவர் உயிர் மாய்ப்பு..!

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில் முன்பாக பாய்ந்து ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கம்பஹா - மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் மீரிகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தலைக்கவசத்துடன் நடமாடினால் சோதனை..!

பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என அறிவித்து பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகள் உள்ளிட்ட பல குற்றங்களைச் செய்த சந்தேகநபர்கள்...

ஜனவரி முதல் நேற்று வரை 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு..!

இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று (22/04/2025) வரையில் 112 நாட்களில், நாடு முழுவதும் 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 26பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த 37 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 23 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதே நேரத்தில், மீதமுள்ள 14...

CCTV கெமராக்கள் மூலம் விதிமீறல்களைச் செய்த சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை!

கொழும்பு நகரைச் சுற்றியுள்ள CCTV கெமராக்கள் மூலம் பதிவான காட்சிகளின் அடிப்படையில், வாகன விதிமீறல்களைச் செய்த 4,000க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வாகன சாரதிகளின் வீடுகளுக்கு, அவர்கள் செய்த வாகன விதிமீறல்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம்...

சமூக ஊடகங்களில் பரவும் போலியான கடிதம் குறித்து பொலிஸார் விளக்கம்!

சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான கடிதம் தொடர்பாக பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர். இதன்படி, இவ்வாறு தவறான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. “கணினி குற்றத் தலைமையகம்” (Computer Crime Headquarters) எனக் குறிப்பிட்டு, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயரையும்,...

ரயிலில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு..!

உயிலங்குளம் பொலிஸ் பிரிவின் சிறுநாவற்குளம் பகுதியில் ரயிலில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார். நேற்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர் தனது குடும்ப உறுப்பினர்களை தலைமன்னாரிலிருந்து கொழும்பு செல்லும் ரயிலில் சிறுநாவற்குளம் ரயில் நிலையத்தில் ஏற்றிவிட்டு ரயில் பயணிக்கும் போது அதிலிருந்து இறங்க முயன்றதாக தெரியவந்துள்ளது. இதன்போது ரயிலில் இருந்து விழுந்த அந்த நபர் பலத்த...

கிறிஸ்தவ தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு..!

மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித தலத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் நேற்று (18/04/2025) இரவு 7 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருந்தார். இது தொடர்பாக மனம்பிடிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட...
- Advertisement -spot_img

Latest News

தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிக்கிறது. இன்று (06) முதல் இந்த விசேட போக்குவரத்து...
- Advertisement -spot_img