மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபர் கோடரியால் தாக்கிக் கொலை செய்யப்பட்டதாக லுணுகம்வெஹெர பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டதில் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (30/04/2025) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் லுணுகம்வெஹெர, அக்கரகல்கொட பகுதியைச் சேர்ந்த 67 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

அந்த நபர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த கெப் வண்டி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்த நபரை சந்தேக நபர் கோடரியால் தாக்கி கொலை செய்துவிட்டு  தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய 27 வயது சந்தேக நபர் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கோடரியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here