Thursday, July 23, 2026
No menu items!

போதனா வைத்தியசாலை

பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ள அரச வைத்திய அதிகாரிகள்!

நாடளாவிய ரீதியில் இன்று (12) தொடக்கம் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி இன்று காலை 8 மணி தொடக்கம் நாடு தழுவிய 24 மணி நேர பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக...

பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தை அமுல்படுத்த சஜித் பிரேமதாச கோரிக்கை!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமாதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று செவ்வாக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “வெளிநபர் ஒருவர் வைத்தியரை அவரது பணி அறைக்குள் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக்...

விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஷாபி சிஹாப்தீன் குற்றமற்றவர் என தீர்ப்பு!

2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஷாபி சிஹாப்தீன் குற்றமற்றவர் என குருநாகல் நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. முறைப்பாடு செய்தவர்கள் தமது குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறியதாலும், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரிலும் குருநாகல் நீதவான் பந்துல குணரத்ன ஷாபி சிஹாப்தீனை அனைத்து...

வெள்ளவத்தை கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

வெள்ளவத்தை கடற்கரையில் நேற்றைய தினம் (03.10) ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. 40 முதல் 45 வயதுக்குட்பட்ட நபர் ஒருவரின் சடலமே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் நீல நிற சட்டை மற்றும் நீண்ட கால்சட்டை அணிந்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில், சடலம் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.  

ஹையேஸ் ரக வாகனம் மோதி இளைஞன் விபத்து!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அராலி கிழக்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த லோகேநாதிரம் கஜேந்திரன் (வயது 29) என்ற இளைஞரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றிரவு ஓட்டுமடம் பக்கத்தில் இருந்து வட்டுக்கோட்டை பக்கமாக வந்த ஹையேஸ் ரக வாகனம் ஒன்று வீதியை கடக்க...

தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட நபர் உயிரிழப்பு!

கடந்த 3ஆம் திகதி குடும்ப தகராறு காரணமாக தனக்கு தானே தீ வைத்துக் கொண்டு தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் சிகிச்சைப் பலனின்றி நேற்று (5) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெற்றியளித்த சத்திரசிகிச்சை!

யாழ்.போதனா வைத்தியசாலையில் இரண்டுதுண்டுகளாகத் துண்டிக்கப்பட்ட கை சத்திரசிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளது. குறித்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தனது சமூகவலைத்தளப்பதிவில் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் கை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே, நீண்ட மணிநேர சத்திர சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக மீண்டும்...

அச்சுறுத்தலுக்குள்ளாகிய நோயாளி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற தன்னை வைத்தியசாலை பணிப்பாளர், சட்ட மருத்துவ அதிகாரி, வைத்தியசாலை பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட சிலர் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பிலான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரான தம்பி ஐயா கிருஷ்ணானந்த் யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து...

தூக்கில் தொங்கிய நிலையில்  வைத்தியரொருவரின் சடலம்!

அனுராதபுரம் மாவட்டம் ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்தியரொருவர் தூக்கில் தொங்கியநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்டவர் கெப்பித்திக்கொல்லாவ சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றி வரும் சாமர சதுரங்க (38வயது) எனவும் தெரிய வந்துள்ளது. வைத்தியரின் மனைவி தம்புத்தேகம வைத்தியசாலையில் தாதியராக கடமை ஆற்றி வருகிறார் . ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேவ பகுதியில் மனைவியின் தாயாரின் வீட்டில் குறித்த சம்பவம்...

இளம் சமூகத்தவரிடம் உள்ள மனநல நோய் அறிகுறி…!!

மனநல நோய்க்குரிய அறிகுறிகளுடன் பதுளை போதனா வைத்தியசாலைக்கு வருகை தரும் சிறுவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பதுளை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மனநல நோய்க்குரிய அறிகுறிகளுடன் நாளாந்தம் 4 முதல் 5 சிறுவர்களும், 3 முதல் 4 இளைஞர் யுவதிகளும் வைத்தியசாலைக்கு வருகை தருகின்றனர். அத்துடன் மயக்கம்,...
- Advertisement -spot_img

Latest News

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 டொலரை தாண்டியது

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை அமெரிக்க டொலர் 100ஐ தாண்டியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பரவி வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகம் மேலும்...
- Advertisement -spot_img