Saturday, November 7, 2026
No menu items!

மட்டக்களப்பு

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஶ்ரீலஶ்ரீ செல்லக் கதிர்காம ஆலய வருடாந்த மகோற்சவம் திருக்கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம்..!

வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு குருக்கள்மடம் ஶ்ரீலஶ்ரீ செல்லக் கதிர்காம ஆலய வருடாந்த மகோற்சவம் திருக்கொடியேற்றத்துடன் இன்று (10) வெகுமிர்சையாக ஆரம்பமானது. ஈழமணித்திருநாட்டின் கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு குருக்கள்மடம் ஶ்ரீலஶ்ரீ செல்லக் கதிர்காம ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது. இன்று (10) காலையில் விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகிய கிரியை நிகழ்வுகளை தொடர்ந்துயாக பூஜை இடம்பெற்று...

சேதமடைந்த அம்பிளாந்துறை பகுதி பாதை!

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை கிராமத்தையும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தையும் இணைக்கும் பிரதான போக்குவரத்து மார்க்கமாக காணப்படும் பாதை இயந்திர படகு பாதையே இவ்வாறு சேதமடைந்து காணப்படுகின்றது. நாளாந்தம் இப் பாதையின் ஊடாக நூற்றுக்கணக்கான மக்கள் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிரயாணம் செய்து வருகின்றனர். மேலும் பாதையின் தட்டி...

அறிவிக்கப்பட்ட தமிழ் பொது வேட்பாளர்..

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். அரியநேத்திரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் சேவையாற்றியிருந்தமை குறிப்பிட்டதக்கது.

மட்டக்களப்பில் மாணவி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம்..!

மட்டக்களப்பில் ஜனாதிபதிக்கு மாணவி ஒருவர் தனக்கு சித்திரபாட ஆசிரியர் ஒருவர் வாய்மூலமாக பாலியல் துஸ்பிரயோம் பிரயோகித்து வருவதாக செய்த முறைப்பாட்டையடுத்து சம்பவம் தொடர்பான மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (07.08) சரணடைந்த ஆசிரியரான ரி.எம்.பி கட்சி உறுப்பினரை எதிர்வரும் 20 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். மட்டக்களப்பு பெண்கள் பாடசாலை ஒன்றில்...

முல்லை கலைஞர்களின் கோவலன் கண்ணகி நாட்டுக்கூத்து !

முல்லைத்தீவு கலைஞர்கள் முல்லைமோடி நடையில் நடித்து வரும் கோவலன் கண்ணகி நாட்டுக்கூத்து கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அரங்கேற்றப்படவுள்ளது. மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் பிள்ளையார் ஆலயத்தின் திருவிழாவினை முன்னிட்டு கிழக்கு பல்கலைக்கழகம் முன்னெடுக்கும் உள்ளுர் கலைகளுக்கான விழா கடந்த 31.07.2024 மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. கிழக்கு பல்கலைக்கழகத்தினால் பாரம்பரிய அரங்காற்றுகைகளும்,காட்சிப்பொருளும் என்ற தொனிப்பொருளில்...

விபத்தில் சிக்கிய யாழில் இருந்து கதிர்காமம் சென்ற பேருந்து….!!

யாழிலிருந்து கதிர்காமம் சென்ற பஸ் நேற்று மாலை திருகோணமலையில் பாரிய விபத்தில் சிக்கியதில்  30 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி A15 திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக பயணித்த பஸ் மூதூர் கெங்கைத்துறை பாலம் அருகே இன்று பிற்பகல் 5 மணியளவில் தடம்புரண்டு 15 அடி பள்ளத்துக்குள் விழுந்து...

மட்டக்களப்பில் முள்ளந்தண்டால் பாதிக்கப்பட்ட 13 பேருக்கு காற்று மெத்தை வழங்கி வைப்பு!

மட்டக்களப்பில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களின் 'படுக்கை புண்ணற்ற வாழ்வுக்கு காற்று மெத்தை' எனும் தொனிப்பொருளில் இங்கிலாந்து மனிதநேய அமைப்பின் அனுசரனையுடன் டேற்ரா சரீட்டி , தமிழ் பரா விளையாட்டுக்கழகம் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட 13 பேருக்கு  காற்று மெத்தை வழங்கி வைக்கப்பட்டது . இந் நிகழ்வு மண்முணை வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம்  நடைபெற்றது. இதில் அதிதிகளாக மண்முணைவடக்கு...

மட்டக்களப்பில் வெடிப்புச் சம்பவம்…

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிப்புக்குட்பட்ட பூநொச்சிமுனை கிராமத்தில் உள்ள வீடொன்றினுள் வெடிப்புச்  சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வெடிப்பு சம்பவம் கடந்த திங்கட்கிழமை (15.07) இரவு9 மணியளவில்  பூநொச்சிமுனை பச்சை வீட்டுத்திட்டம் என்னும் குடியேற்ற கிராமத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டின் அறையொன்றிலேயே குறித்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாரிய சேதங்கள் ஏற்படாத நிலையிலும் பாரியளவிலான சத்தம்...

64 மில்லியன் செலவில் காபெட் வீதியாக புணரமைக்கப்பட்ட பனிச்சங்கேணி சல்லித்தீவு !

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் 64 மில்லியன் செலவில் காபெட் வீதியாக  கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பனிச்சங்கேணி சல்லித்தீவு வீதியானது புணரமைக்கப்பட்டது. இவ் வீதியானது மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வானது கட்சியின் பிரதேச குழு தலைவர் மதிவேந்தன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட...

மட்டக்களப்பில் முச்சக்கர வண்டியை மோதிவிட்டு தப்பிச் சென்ற கார்…!!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். வாழைச்சேனை - செம்மண்ஓடை பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் முச்சக்கர வண்டியில் மட்டக்களப்பு நோக்கி தன்னாமுனை பகுதியால் செல்லும் போது பின்னால் வந்த கார் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த விபத்தில்  முச்சக்கர வண்டியில்  பயணித்த இரு இளைஞர்களும் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு...
- Advertisement -spot_img

Latest News

பரீட்சை சான்றிதழ்களுக்கான இணைய விண்ணப்ப சேவை இடைநிறுத்தம்

பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய சான்றிதழ் விண்ணப்ப சேவை 2026 நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம்...
- Advertisement -spot_img