Saturday, May 9, 2026
No menu items!

மஹியங்கனை

யாத்திரிகர்கள் பயணித்த பேருந்து விபத்து – பலர் காயம்!

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த சந்தியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (15) காலை 7.15 மணியளவில் குறித்த பேருந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. யாத்திரிகர்கள் பயணித்த பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. பேருந்தில் 30 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த...

காதலனுக்காக உயிரைப் பணயம் வைத்த மாணவி; நீரில் மூழ்கி மாயம்!

மஹியங்கனை – கணுவ பகுதியில் உள்ள வியானா கால்வாயில் தவறி விழுந்த காதலனை காப்பாற்ற முயன்ற காதலி நீரில் மூழ்கி காணாமல் போன சோக நிகழ்வு நேற்று (ஜூலை 20) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 26 வயதுடைய  மாணவியே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். கால்வாயில் நீரோட்டம் அதிகமாக காணப்பட்ட...

15 வயது மாணவிக்கு எய்ட்ஸ் தொற்று உறுதி: மாணவர்கள் வழி தவறும் நிலை பற்றி பொலிஸ் எச்சரிக்கை!

மஹியங்கனையைச் சேர்ந்த 15 வயது பிள்ளைக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கருத்து தெரிவித்த அவர், பல மாணவர்கள் பாடசாலைக்கோ அல்லது மேலதிக வகுப்புகளுக்கோ செல்வதில்லை என்றும் தேவையற்ற இடங்களுக்கே செல்வதாகவும் கூறினார். "சில மாணவர்கள் பாடசாலை அல்லது மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக கூறி வனப்பகுதிக்கு செல்கின்றனர். இந்த பிள்ளைகள் அங்கு தங்கியிருக்கும் போது நோய்கள்...

மஹியங்கனை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகரின் விபரீத முடிவு!

மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் ஹசலக, வேரகந்தோட்டையைச் சேர்ந்த 57 வயதுடையவர் ஆவார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இந்த அதிகாரி, கடந்த சில நாட்களாக தனிப்பட்ட காரணங்களால் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தனியார் பேருந்தை வழிமறித்து இரண்டு நபர்கள் தகராறு !

தனியார் பேருந்தை வழிமறித்து காரில் வந்த இரண்டு நபர்கள், அந்த வழித்தடத்தில் இயக்க பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை மிரட்டி கப்பம் கோரும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பேருந்தில் இருந்த ஒரு பயணி பதிவு செய்த சம்பவத்தில், காரில் இருந்து ஒருவர் பேருந்தில் ஏறி, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை வாய்மொழியாக திட்டுவதும், பின்னர் அவர்களைத்...

மீண்டும் மூடப்படவுள்ள கண்டி-மஹியங்கனை வீதி!

கண்டி-மஹியங்கனை வீதி பாறைகள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் இன்று (22) மாலை 6 மணி முதல் நாளை (23) காலை 6 மணி வரை மூடப்படும் என்று கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

கண்டி-மஹியங்கனை வீதி மீண்டும் திறப்பு!

அண்மைய நாட்களில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக நேற்று (21) பிற்பகல் மூடப்பட்ட கண்டி மஹியங்கனை பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கண்டி மஹியங்கனை உடுதும்பர கஹட்டகொல்ல பகுதியிலிருந்து மேடுகள் மற்றும் பாறைகள் விழும் அபாயம் உள்ளதால் வீதியை மூடுவதற்கு  நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேபோன்று ஆபத்தான நிலைமை தொடர்ந்தும் நீடிப்பதால், இரவில் பயணிக்கும் வாகனங்களுக்கும் மக்களுக்கும்...

கண்டி – மஹியங்கனை வீதி மீளத் திறப்பு!

உடுதும்பர – கஹடகொல்ல பகுதியில் மண்சரிவு மற்றும் கல் உருளுதல் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி – மஹியங்கனை வீதி இன்று காலை 6 மணிக்கு மீளத் திறக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நேற்றைய தினம் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் பரிசோதனைகளை மேற்கொண்டனர். குறித்த வீதியை இரவு நேரங்களில் பயன்படுத்தும் வாகனங்கள் மற்றும் சாரதிகளுக்கு ஆபத்து...

மஹியங்கனையில் 1050 கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது…!

மஹியங்கனை 50ஆம் கட்டை உக்வகாவ பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 1050 கஞ்சா செடிகளும் ஒரு கிலோ 500 கிராம் காய்ந்த கஞ்சாவுடனும் ஒருவர் நேற்று சனிக்கிழமை (26.10.2024) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹியங்கனை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, பணம் கொடுத்து கஞ்சா கொள்வனவு செய்வதற்காக மாறுவேடத்தில் சென்ற...

காணாமல்போன மாணவிகளில் ஒருவர் சடலகமாக மீட்பு!

காணாமல் போயிருந்ததாகக் கூறப்படும் கந்தேககெதர பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய 2 மாணவிகளில் ஒருவர், மஹியங்கனை - லொக்கல் ஓயாவிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒரே பாடசாலையில் கல்வி கற்றுவந்த, இரு மாணவிகள், பதுளை நகருக்கு மேலதிக வகுப்புக்குச் செல்வதாகக் கூறி, நேற்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தனர். எனினும், அவர்கள் வீடு திரும்பாதமையினால், அவர்களது...
- Advertisement -spot_img

Latest News

விசிக தலைவரை சந்திக்கும் விஜய்!

தமிழக சட்ட சபைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில்,விசிக இந்திய...
- Advertisement -spot_img