Friday, April 24, 2026
No menu items!

மின்னேரியா

மின்னேரியாவில் பேருந்து – பார்வூர்தி நேருக்கு நேர் மோதல்: 27 பேர் காயம்!

மின்னேரியாவில் உள்ள ஒரு பாலத்திற்கு அருகில் தனியார் பேருந்தும் பார்வூர்தியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் 27 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நெல் களஞ்சியசாலைக்கு சீல் வைக்க நுகர்வோர் விவகார அதிகாரிகள் நடவடிக்கை..!

மின்னேரியா பிரதேசத்தில் நெல் மற்றும் பழுதடைந்த நெல்லை கலந்து விற்பனை செய்து வந்த நெல் களஞ்சியசாலை ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் சுற்றிவளைத்தனர். பழுதடைந்த நெல்லுடன் கலந்த சுமார் 6,000 கிலோ நெல் குறித்த களஞ்சியசாலையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட நெல் களஞ்சியசாலைக்கு சீல் வைக்க நுகர்வோர் விவகார அதிகாரிகள் நடவடிக்கை...

மின்னேரியா வீதியில் பேருந்து விபத்து;16 பேர் காயம்!

ஹபரணை - மின்னேரியா வீதியில் 7ஆவது மைல்கல் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்த நபர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பேருந்து  ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளன. இன்று (29) காலை 11:00 மணியளவில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் இ.போ.ச...

கொழும்பு – மட்டக்களப்பு தொடருந்து  சேவைகள் இன்று இரத்து!

கொழும்பு - மட்டக்களப்பு தொடருந்து  சேவைகள் அனைத்தும் இன்றைய தினம் (18) இரத்து செய்யப்பட்டுள்ளன. மின்னேரியா – ரொட்டவௌ பகுதியில் எரிபொருள் தாங்கிய தொடருந்தில் மோதி இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. இதன் காரணமாக, தொடருந்து தடம்புரண்டதுடன் தொடருந்து பாதை பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து பாதையினைச் சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மின்னேரியா வாவியிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்…!

மின்னேரியா நகருக்கு அருகிலுள்ள யோத வாவியில் விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்ததாக கூறப்படும் பெண்ணின் அடையாளம் குறித்து எதுவும் கண்டறியப்படவில்லையெனவும் அங்குள்ள மக்கள் அனைவரும் குறித்த பெண் ஒரு பிச்சைக்காரியென்றும் பொலிஸாரிடம் கூறியுள்ளனர். மின்னேரியா நகருக்கு அருகிலுள்ள யோத வாவியில் தவறி விழுந்து, இரண்டு கிலோமீற்றர் தூரம் அடித்து செல்லப்பட்ட சந்தர்ப்பத்திலேயே  மின்னேரியா...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img