நாட்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் அதிகபட்ச சில்லறை விலைகள் திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.

இந்த திருத்தம் இன்று (10) முதல் அமுலுக்கு வரும் நிலையில்,500மிலி முதல் 999மிலி வரையிலான போத்தல்களை அதிகபட்சமாக ரூ.70-லிருந்து ரூ. 80-ரூபாவிற்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 1 லிட்டர் முதல் 1.49 லிட்டர் வரையிலான போத்தல்களின் விலை ரூ. 100-லிருந்து ரூ. 120 ஆகவும்,1.5 லிட்டர் முதல் 1.99 லிட்டர் வரையிலான போத்தல்களின் விலை ரூ. 130-லிருந்து ரூ. 150 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2 லிட்டர் முதல் 2.49 லிட்டர் வரையிலான போத்தல்களின் அதிகபட்ச விலை ரூ.160-லிருந்து ரூ. 180 ஆகவும், 5 லிட்டர் முதல் 6.99 லிட்டர் வரையிலான போத்தல்களின் விலை ரூ. 350-லிருந்து ரூ. 400 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here