துப்பாக்கிச் சூட்டில் யானையைக் கொன்று, அதனை வெட்டியதாகக் கூறப்படும் குற்றத்திற்காக, புனானையைச் சேர்ந்த 44 வயது சந்தேகநபர் ஒருவர் வெலிகந்த பொலிஸ் பிரிவின் வடுமுனை வனப்பகுதிக்குள் கைது செய்யப்பட்டுள்ளார்.

உளவுத் தகவலின் அடிப்படையில் பொலிஸ் அதிகாரிகள் குறித்த வனப் பாதுகாப்பு பகுதிக்குள் நுழைந்து சந்தேக நபரைச் சுற்றி வளைத்ததைத் தொடர்ந்து, நேற்று (09)மாலை இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு ஜோடி யானைத் தந்தங்களும், உள்ளூர் துப்பாக்கியும் அவரிடமிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த யானை சிறிது நேரத்திற்கு முன்பே கொல்லப்பட்டிருந்தது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதோடு,இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என போலீசார் மெங்கும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here