மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்
புதிய செய்திகள்
கெரண்டி எல்லவில் விபத்துக்கு காரணம் பேருந்தின் இயந்திரக் கோளாறு அல்ல?
இறம்பொடை - கெரண்டி எல்ல பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தில் சாரதி உட்பட 81 பேர் பயணத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
22 பேர் மரணித்த இந்த விபத்துடன் தொடர்புடைய பேருந்தில் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட பரிசோதனையில், பேருந்தில் இயந்திரக் குறைபாடுகளும் இல்லை என மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகன...
புதிய செய்திகள்
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் மீது கோபமடைந்த கோபாகுழு!
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் கோபா என்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் உரிய தயார்ப்படுத்தலுடன் அங்கு முன்னிலையாகியிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த கோபா குழு அந்த திணைக்களத்தின் அதிகாரிகளை மற்றுமொரு தினத்தில் தயார்ப்படுத்தலுடன் வருமாறு அறிவுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2020, 2021, 2022 மற்றும் 2023ஆம்...
புதிய செய்திகள்
வீதி சமிக்ஞைகளை நவீனமயமாக்குவதற்கு நடவடிக்கை!
“அழகான இலங்கை சுத்தமான சுவாசத்திற்கான இடம்“ என்ற தொனிப்பொருளின் கீழ் , நகரங்களில் பொருத்தப்பட்டுள்ள வீதி சமிக்ஞைகளை நவீனமயமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்கவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வேளைத்திட்டத்திற்கு, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன உமிழ்வு அறக்கட்டளை நிதியம் முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளது.
இதன் முதற் கட்ட...
Top
இன்று முதல் வாகன இறக்குமதி..!
வாகன இறக்குமதிக்குத் தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடை இன்று முதல் அமுலாகும் வகையில் தளர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் நேற்று வெளியிடப்பட்டது.
இதற்கமைய, பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், வணிக மற்றும் பொருட்கள் போக்குவரத்துக்கான வாகனங்கள், தனியார் வாகனங்கள், முச்சக்கர வண்டிகள், உந்துருளிகள் மற்றும் மிதிவண்டி என்பவற்றை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மோட்டார்...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


