மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் கோபா என்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் உரிய தயார்ப்படுத்தலுடன் அங்கு முன்னிலையாகியிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த கோபா குழு அந்த திணைக்களத்தின் அதிகாரிகளை மற்றுமொரு தினத்தில் தயார்ப்படுத்தலுடன் வருமாறு அறிவுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2020, 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வு அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் கோபா குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அதேநேரம், கோபா குழுவின் கடந்தகாலக் கூட்டங்களில் வழங்கப்பட்ட பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டமை குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக இலங்கை சுங்கத்தின் கணினிக் கட்டமைப்புடன் இணைந்து கொள்வதற்கு முன்னதாக இடம்பெற்ற சட்டவிரோத வாகனப் பதிவுகள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தினால் முன்வைக்கப்பட்ட 25 விடயங்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் அதற்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here