Thursday, November 19, 2026
No menu items!

வடக்கு மாகாண ஆளுநர்

வடக்கினை நோக்கி படையெடுக்கும் புலம்பெயர் முதலீட்டாளர்கள்..!

தற்போதைய சூழலில் வடக்கு மாகாணத்தை நோக்கி பல்வேறு புலம்பெயர் முதலீட்டாளர்கள் வருகின்றனர். அவர்களை வரவேற்பதுடன் இன்னமும் அதிகமான முதலீடுகள் எமது மாகாணத்தை நோக்கி வரவேண்டும். அதன் ஊடாக எமது பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். 15ஆவது ஆண்டாகவும் நடைபெறும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக்...

சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று ஆரம்பம்..!

இன்று காலை 10:30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் ஆரம்பமான இந்த வர்த்தக கண்காட்சி நாளை (25/1/2025) மற்றும் நாளை மறுதினம் (26/1/2025) ஆகிய மூன்று தினங்களில் நடைபெறவுள்ளது. காலை 09:30 யாழ்ப்பாணம் ரில்கோ தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்று விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு வர்த்தக கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர்...

சுகாதார சேவையினரின் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு..!

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தம்மால் முடிந்தளவு சிறப்பான சேவையை மக்களுக்கு முன்னெடுத்து வருகின்றமைக்கு சுகாதார திணைக்களத்தினருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், சுகாதார சேவையினரின் நியாயமான கோரிக்கைகளுக்கு முடியுமானவரையில் விரைவாக தீர்வுகளைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்தார். வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் கீழான மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், பொதுமருத்துவமனைப்...

ஆளுநரின் கருத்து எமக்கு முக்கியமல்ல – கொந்தளிக்கும் இ.போ.ச முகாமையாளர்..!

ஆளுநரின் கருத்து எமக்கு முக்கியமல்ல, தொழிலாளிகளின் கருத்துகளே முக்கியமானது. பயணிகள் குழப்பமடைய தேவையில்லை இ.போ.ச சேவைகள் வழமை போல் இடம்பெறும் என இ.போ.ச வடபிராந்திய முகாமையாளர் கந்தசாமி கேதீசன் தெரிவித்துள்ளார். கடந்த 17.01.2025 ஆம் ஆண்டு கௌரவ வடக்கு மாகாண ஆளுநருடன் எமது சந்திப்பு இடம்பெற்றது. தூர சேவை பேருந்துகள் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் கடமையாற்றுமாறும்...

யாழ். கலாசார மத்திய நிலையம் பெயர் மாற்றம்..!

யாழ்.கலாசார மத்திய நிலையமானது "திருவள்ளுவர் கலாசார மையம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்வு திருவள்ளுவர் கலாசார மையத்தில் இன்று (1/18/2025) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் புத்த சாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, யாழ்...

தனியார் மற்றும் அரச போக்குவரத்து பிரிவினர் புதிய முறைக்கு இணக்கம்..!

01.02.2025 இலிருந்து யாழ்ப்பாண நகரில் அமைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையும் தனியாரும் இணைந்து நெடுந்தூர சேவைகளை ஆரம்பிப்பதற்கு இரு தரப்பினரும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயன் அவர்கள் தலைமையிலான கலந்துரையாடலில் இணக்கம் வெளியிட்டனர். இதனையடுத்து எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து இணைந்த நேர அட்டவணையின் கீழ் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து சேவைகள்...

விவசாயப் போதனாசிரியர்களின் கொடுப்பனவு அதிகரிக்குமா?

வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர்களின் வெளிக்களக் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவுறுத்தல் வழங்கினார். வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர்கள் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை காலை (15.01.2025) இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர்,...

உயர்கல்வியில் சில துறைகளை புறக்கணிக்கும் வடக்கு மாணவர்கள் – வேதநாயகன் சுட்டிக்காட்டு!

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் சில துறைகளை உயர்கல்விக்காக தேர்ந்தெடுக்காமையால் இங்குள்ள வெற்றிடங்களுக்கு வேறு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்கவேண்டிய நிலைமை காணப்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சுட்டிக்காட்டினார். யாழ். கல்விக் கண்காட்சி – 2025 திறப்பு விழா சனிக்கிழமை காலை (11.01.2025) வலம்புரி ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட...

அரச பணியாளர்களின் மாற்றமூடாகவே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் – வேதநாயகன்..!

அரசாங்க பணியாளர்களின் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். 'கிளீன் சிறிலங்கா' திட்டம் தொடர்பில் வடக்கு மாகாண அலுவலர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை காலை (09.01.2025) இடம்பெற்றது. ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச்...

யாழ் – சுகாதார நகர திட்டம் – ஆளுநரின் ஆக்கபூர்வ தீர்மானம்..!

'யாழ்ப்பாணம் - சுகாதார நகர திட்டத்தின்' முன்னேற்றம் தொடர்பான கலந்தாய்வு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் திங்கட்கிழமை காலை (06.01.2025) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. உலக சுகாதார நிறுவனத்தால் அடையாளப்படுத்தப்பட்ட விடயப் பரப்புக்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. பாடசாலை நேரங்களில் கனரக வாகனங்களின் பாவனையை மட்டுப்படுத்துவதன் தேவைப்பாடு ஆராயப்பட்டதுடன் யாழ். நகரப் பகுதியில் அமைந்துள்ள...
- Advertisement -spot_img

Latest News

தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

கடுவலையில் மின்சார உபகரண விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வர்த்தக நிலையத்தில் தீ பரவியதில்...
- Advertisement -spot_img