யாழ்ப்பாணத்தில் காற்றின் தர சுட்டெண் 200 என்ற அளவை தாண்டியுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை அறிவிக்கிறது.
இன்று (19) காலை வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில் நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரம் சுகாதாரத்திற்கு பாதிப்பான மட்டத்தை அடைந்திருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று காலை 7.05 மணிக்கு பத்தரமுல்லையில் 179, கிளிநொச்சியில் 158, அனுராதபுரத்தில் 158, திருகோணமலையில் 151 மற்றும் ஹலாவத்தையில் 165 என உயர் பெறுமதிகள் பதிவாகியுள்ளன.
இந்தப் பகுதிகளில் காற்றின் தரம் சுகாதார மட்டத்தில் இல்லை எனவும் மக்களுக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை குறிப்பிடுகிறது.
இதற்கமைய சம்பந்தப்பட்ட பகுதிகளில் சுவாச நோய்கள் மற்றும் ஒவ்வாமை உள்ளவர்கள் KN95 வகை முகக்கவசம் அணியுமாறு சுகாதார அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், நெரிசல் மிகுந்த வெப்பகுதியில் இருப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.








