Monday, June 29, 2026
No menu items!

#topnews #srilankanews #tamilnews #srilanka #vettritv #vettrinews #trendingnews

மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தாலே பிரச்சினைகள் தீர்ந்து விடும் – வேதநாயகன் தெரிவிப்பு..!

மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தால் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும் எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் அரச திணைக்களங்கள் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும் என கேட்டுக்கொண்டார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் தின நிகழ்வு ரில்கோ ஹோட்டலில் நேற்று வியாழக்கிழமை (12.12.2024) மாலை...

கொக்கெய்ன் பொட்டலங்களுடன் இருவர் கைது..!

யாழ்ப்பாணம்  காரைநகர்,  கசூரினா கடற்கரையில் 7 பைகளில்  93 கேரள கொக்கெய்ன் பொட்டலங்களுடன் இருவர்  நேற்றையதினம்(11)  5.30 மணியளவில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த நபரகள் மன்னார் மற்றும் முழங்காவில் பிரதேசங்களைச் சேர்ந்த 33 மற்றும் 27 வயதுடைய நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு...

கோட்டாபயவின் நிலையே அநுரவுக்கும் ஏற்படும் – சசிகுமார் தெரிவிப்பு..!

நாட்டில் தற்போது தேங்காய் மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமைக்கு அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளே காரணம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர் சுப்ரமணியம் சசிகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது நாட்டில் மீண்டும் வரிசை உருவாகும் நிலைமை காணப்படுகிறது. மக்களை...

இறக்குமதி அரிசிக்கான வரி தொடர்பில் வெளியான தகவல்..!

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான சுங்க வரி 15 ரூபாவினால் குறைக்கப்பட்டால், சில்லறை விற்பனைக்காக அரிசியை சிறந்ததொரு விலைக்கு வழங்க முடியும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டு அரிசியை ஏறக்குறைய 220 ரூபாவிற்கு வழங்க முடியும் என இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன...

பொலித்தீன் விற்பனை தொடர்பில் விசேட சோதனை..!

பாவனைக்கு பொருத்தமற்ற மற்றும் பொலித்தீன் விற்பனை தொடர்பில் சோதனைகள் இடம்பெற்று வருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாடளாவிய ரீதியில் முக்கிய நகரங்களைச் சுற்றியுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையங்களில் குறித்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார். அங்கு பாவனைக்கு பொருத்தமற்ற பொருட்களை விற்பனை...

மாணவர்களின் நலன் அடிப்படையில் கொள்கைகள் – பிரதமர் ஹரிணி தெரிவிப்பு..!

பாடசாலை மாணவர்களின் நலனை அடிப்படையாக் கொண்ட தரவுகளின் அடிப்படையில் கொள்கைகள் மற்றும் முடிவுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 'தற்போதைய கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான மூலோபாயங்களை வகுத்தல்' என்ற தலைப்பில் கொழும்பில் நேற்று (11.12.2024) இடம்பெற்ற செயலமர்வில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதிகாரிகள், பொதுச் சேவை வழங்குநர்கள் என்ற வகையில்...

வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழப்பு..!

காலி, இமதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திக்கும்புர பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் வெட்டுக் காயங்களுடன் கீழே விழுந்து கிடந்த நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக இமதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (11.12.2024) இரவு இடம்பெற்றுள்ளது. காலி, திக்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே...

மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்குரிய அலுவலகம் திறந்து வைப்பு..!

மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்குரிய அலுவலகம் கிளிநொச்சியில் சம்பிரதாயபூர்வமாக இன்றைய தினம் (12.12.2024) திறந்து வைக்கப்பட்டது. இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் தற்காலிக இடத்தில் இயங்கி வந்த மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்கு கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட கட்டிடம் சம்பிரதாயபூர்வமாக இன்று திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகம், வடமாகாண பிரதம செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜனவரி...

அரிய வகை நீலநிற மாணிக்கக்கல் கண்டுபிடிப்பு..!

நீர்கொழும்பில் வர்த்தகர் ஒருவர் பிரமிட் வடிவில் வெட்டப்படாத அரிய வகை நீலநிற மாணிக்கக்கல் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். எனினும் இதன் பெறுமதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 17.42 கெரட் நிறை கொண்ட குறித்த மாணிக்கக்கல் பதுளை, பசறை பகுதியில் உள்ள சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாணிக்கக்கல் தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபையின் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழைக் கொண்டுள்ளது. உலகச் சந்தையுடன்...

புதிய அரசின் வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் இணக்கம்..!

அபிவிருத்தி அடைந்த இலங்கையை கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய அரபு அமீரகம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்குள் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை அதிகரிப்பதுடன், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கான தொழில்நுட்ப அறிவை பெற்றுத்தருவதாகவும் இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் காலித் நசர் அல் அமேரி (Khaled Nasser AlAmeri)...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img