Sunday, June 28, 2026
No menu items!

#topnews #srilankanews #tamilnews #srilanka #vettritv #vettrinews #trendingnews

ரணிலுக்கு பதிலளித்த நலிந்த ஜயதிஸ்ஸ…!

மதுபான நிறுவனங்களிடமிருந்து சுமார்  7 பில்லியன் ரூபாய் வரிகள் அறவிடப்பட வேண்டியுள்ளதாகவும், அந்த வரிகளை அறவிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். உரிய நடைமுறைக்கு புறம்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் எவருக்கும் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என நேற்று (09.12.2024) அவரது  அலுவலகத்தினால்...

மன்னாரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம்..!

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (10.12.2024) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில்...

நடப்பாண்டுக்கான இறுதி மாவட்ட விவசாய குழுக் கூட்டம் இன்று..!

கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி மாவட்ட விவசாய குழுக் கூட்டம் இன்று (10.12.2024) செவ்வாய்க்கிழமை காலை 9.30மணிக்கு நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாடு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் இக் கூட்டத்தில் முன்கொண்டுவரப்பட்டு விடயங்கள்...

இந்திய மீனவர் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் – சம்மேளன தலைவர் கோரிக்கை..!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்படியில் ஈடுபட்டு வரும் இந்திய மீனவர்கள் தொடர்பில் இந்தியா செல்லும் எமது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்தியா பிரதமருடன் பேசி முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோணிப் பிள்ளை மரியதாஸ் கோரிக்கை விடுத்தார். இன்று (10.12.2024) செவ்வாய்க்கிழமை யாழ் மாவட்ட கூட்டுறவு சமாசத்தில்...

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்..!

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் புதிய செயலாளராக டொக்டர் அனில் ஜாசிங்க, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் கலாநிதி ஜாசிங்கவிடம் இன்று (10.12.2024) ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!

அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதிகபட்ச விலைக்கு மேல் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடும் வகையில் இன்று (10.12.2024) முதல் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் (09.12.2024) வௌியிடப்பட்ட அரிசிக்கான அதிகபட்ச விலையை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தலின் படி, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன்...

ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் இணைந்து முல்லைத்தீவில் போராட்டம்..!

முல்லைத்தீவு  மீனவர்களினால் இன்றைய தினம்(10) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தாம் எதிர்கொண்டுவரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தித் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமெனப் போராட்டத்தில்...

மதுவரி ஆணையாளராக யு.எல். உதய குமார பெரேரா..!

புதிய மதுவரி ஆணையாளராகச் சிறப்புத் தர அதிகாரி யு.எல். உதய குமார பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட ஆணையாளராக பணியாற்றியவர். மதுவரி ஆணையாளர் நாயகமாக பணியாற்றிய யு. டி. என். ஜயவீர, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கு யு.எல். உதய குமார பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

வர்த்தகர்களுக்கு மகிழ்ச்சி தகவல்..!

2025 மார்ச் 31 வரை பரேட் சட்டத்தின் இடைநிறுத்தத்தை நீட்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் கடனை செலுத்தத் தவறியதால், அவர்களின் சொத்துக்களை ஏலம் விடுவது இந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இன்றைய தினம்(10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில்...

நுகர்வோருக்கு எச்சரிக்கை..!

பண்டிகைக் காலத்தை இலக்காகக் கொண்டு மனித பாவனைக்கு உதவாத மற்றும் காலாவதியாகவுள்ள உணவுப் பொருட்களை மோசடியான வர்த்தகர்கள் சந்தைக்கு வெளியிட வாய்ப்புகள் உள்ளதாக பொதுசுகாதாார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். பண்டிகைக் காலத்தில் பொருட்களை நுகரும் போது அது தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, பண்டிகைக் காலத்தை இலக்காகக்...
- Advertisement -spot_img

Latest News

கொடுப்பனவை இழக்கும் சிரேஷ்ட  பிரஜைகளுக்கு அடையாள அட்டை வழங்க திட்டம்

தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் மாதாந்த முதியோர் கொடுப்பனவை இழந்துள்ள குறைந்த வருமானம் கொண்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் விசேட...
- Advertisement -spot_img