நாட்டில் முதல் காலாண்டில் மாத்திரம் 207 HIV தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், 13 பேர் உயிரிழந்துள்ளனர். வருடாந்தம் 700 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்படுகிறார்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
HIV தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 300 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மாத்திரம் 207 HIV தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
முதல் காலாண்டில் இனங்காணப்பட்ட 207 தொற்றாளர்களில் 15 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட 23 ஆண்களும், 05 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அத்துடன் முதல் காலாண்டில் HIV தொற்றாளர்களில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், இலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 5912 பேர் HIV தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.