கண்டி மல்வத்து மஹா விகாரையின் சியம் மஹா நிக்காய மல்வத்து பீடத்தின் மஹா நாயக்க தேரர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் மல்வத்து பீடத்தின் அனுநாயக்க பூஜ்ய திம்புல்கும்புரே விமலதம்ம ஹிமிபாணன் தேரர் ஆகியோரை ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க சந்தித்துள்ளார்.
நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமை பற்றி மஹா சங்கத்தினருடன் கலந்துரையாடிய அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலில் வெற்றி பெறுவதற்கான நல்லாசியை அவர்களிடம் இதன்போது பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் லால் காந்தவும் பங்கேற்றுள்ளார்.







