அநுராதபுரத்தில் கல்னெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கல்னெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் அநுராதபுரம் கலங்குட்டிய பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் கொலை செய்யப்பட்டவரது சடலம் நீதவான் விசாரணைகளுக்காக சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்,சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Post Views: 2