Friday, June 5, 2026
No menu items!

அநுராதபுரம்

அநுராதபுரத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து – உயர்தரப் பரீட்சை மாணவர்கள் உட்பட பலர் காயம்!

அநுராதபுரம் தலாவை ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை தலாவ வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தலாவப் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாகப் பொலிஸார் கூறியுள்ளனர். தற்போது காயமடைந்தவர்கள் தம்புத்தேகம மற்றும் தலாவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பாக மேலதிக...

போதைப்பொருளுடன் பாடசாலையின் அதிபர் கைது-அதிர்ச்சியூட்டும் பின்னணி!

அநுராதபுரம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பிரபல பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் காவல்துறை மேற்கொண்ட விசாரணைகளின் படி, குறித்த பாடசாலை அதிபரின் மனைவி, தேசிய மக்கள் சக்தியின் பேலியகொடை நகர சபை உறுப்பினர் திஸ்னா நிரஞ்சலா என்பவர், போதைப்பொருள் கடத்தல்காரர் கொஸ்கொட சுஜீயின் உறவினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த மாதம் 29ஆம் திகதி...

GovPay மூலம் போக்குவரத்து அபராதம்: இரண்டு மாதங்களில் ரூ. 3 கோடி வசூல்!!

GovPay டிஜிட்டல் கட்டண தளம் மூலம் மேற்கு மாகாணம் மற்றும் தம்புள்ளை – அநுராதபுரம் இடையேயான பகுதிகளில் போக்குவரத்து உடனடி அபராதங்கள் வசூலாகி, கிட்டத்தட்ட ரூ. 30 மில்லியன் ஈட்டப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் டிஜிட்டல் விவகார பணிக்குழுவின் தலைவர் ஹர்ஷ புரசின்கே இதனை இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்த GovPay...

சிறுநீரக நோய்களுக்குத் தீர்வாக; நீர் விநியோகத் திட்டம்!

அநுராதபுர மற்றும் குருநாகல் மாவட்டங்களின் எல்லைப் பிரதேசங்களில் அதிகரித்து வரும் நாட்பட்ட சிறுநீரக நோய்கள் மற்றும் பாதுகாப்பான குடிநீர் பற்றாக்குறை ஆகியவைக் கருத்தில் கொண்டு, எப்பாவெல, கிரிபாவ, இராஜாங்கனை மற்றும் நொச்சியாகம ஒருங்கிணைந்த நீர் விநியோகத் திட்டத்தின் முதலாம் கட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம், 09 பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள 134...

இன்று மாலை இலங்கை வரும் தமன்னா..!!

பிரபல  தென்னிந்திய  நடிகை  தமன்னா  இன்று மாலை இலங்கை வரவுள்ளார். விளம்பர படப்பிடிப்பிற்காக அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விளம்பர படப்பிடிப்புக்கள் அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளன. இந்தியா திரும்புவதற்கு முன் பல நாட்கள் அவர் நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

சமூக ஊடகங்களில் இளைஞர்களை ஏமாற்றி பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டதாக கூறப்படும் பெண் கைது!

சமூக ஊடகங்களில் அறிமுகமான இளைஞர்களை ஏமாற்றி அநுராதபுரம் - மிஹிந்தலை பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டதாக கூறப்படும் பெண் உட்பட நால்வர் மிஹிந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டர்களில்   31 வயதுடைய பெண்ணொருவரும் காணப்படுகின்றார். இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபரான பெண் அநுராதபுரம், விஜயபுரம், அசோகபுரம் மற்றும் கெக்கிராவை...

புனித ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாட்டில் ஈடுபட்ட மோடி..!

அநுராதபுரத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (6) காலை விஜயம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அநுராதபுரத்தில் உள்ள புனித ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாட்டில் ஈடுபட்டார். இது தொடர்பில் தனது எக்ஸ்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள இந்தியப் பிரதமர், “அநுராதபுரத்தில் உள்ள புனித ஜய ஸ்ரீ மஹா போதியில் ஜனாதிபதி திசாநாயக்கவுடன் பிரார்த்தனை செய்தேன். பௌத்த மதத்தின் மிகவும்...

இன்று அநுராதபுரத்திற்கு விஜயம் மேற்கொண்டு இருக்கும் இந்தியப் பிரதமர்..!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அநுராதபுரத்திற்குச் செல்லவுள்ளார். இதன்போது, இந்தியப் பிரதமர் அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதி விகாரையில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் இந்தியப் பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு அநுராதபுர நகரைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், இன்று காலை 8.30 முதல் 11...

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

ஒரு கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சா போதைப் பொருளை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற சந்தேக நபர் ஒருவரை அநுராதபுரம் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய திங்கட்கிழமை (24) மாத்தளை சந்தி குருந்தங்குளம் பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரை கைதுசெய்துள்ளதுடன் கேரள கஞ்சா மற்றும் சந்தேகநபர்...

அநுராதபுரம் பெண் வைத்தியர் தொடர்பான சம்பவத்தில் சந்தேகநபர்  தொடர்பில் வெளிவந்த உண்மை!

அநுராதபுரம் வைத்தியசாலையின் வைத்தியர் தொடர்பான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 34 வயதுடைய சந்தேக நபர் நேற்று இரவு அநுராதபுரம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். சந்தேக நபரை நேற்று கல்னேவ ஹெலபதுகம பகுதியில் கல்னேவ காவல்துறையினர் கைது செய்தனர். கல்னேவ காவல்துறையினர் சந்தேக நபர் தொடர்பில் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர். தான் சிறைச்சாலையிலிருந்து பிணையில் வெளியில் வந்ததாகவும், பணம் இல்லாமையின் காரணமாக...
- Advertisement -spot_img

Latest News

அங்குருவதோட்ட முதியோர் இல்ல அனர்த்தம்; உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு

களுத்துறை அங்குருவதோட்ட, பட்டகொட பகுதியில் உள்ள ‘செனஹசே கெடல்ல’ முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நேற்று 12 பேர் வரையில் உயிரிழந்திருந்த நிலையில் இன்று...
- Advertisement -spot_img