மணல் அகழ்விற்க்கு அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களுடன் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிசாருக்கு 05.07.2024 கிடைக்கப்பெற்ற தகவளுக்கமைவாக கல்லாறு பகுதியில் அனுமதி பாத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணித்த நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுரம் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட வீதிச் சோதனை மூலம் கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், தடையப் பொருட்கள் எதிர்வரும் பத்தாம் திகதி10 கிளிநொச்சி நீதிமன்றல் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபும் பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்


Post Views: 2