சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை பங்களா வீதிச் சந்தியை அண்மித்த பகுதியில் 15வயதான பாடசாலை மாணவி ஒருவரும்-அவருடைய தந்தையும் படுகாயமடைந்துள்ளனர்.

மீசாலையில் இருந்து வந்த மோட்டார்சைக்கிளின் பின்புறமாக அதே திசையில் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் மேற்படி விபத்துச் சம்பவித்துள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் இருந்து பயணித்த மாணவியின் கால் டிப்பருக்குள் அகப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.அத்துடன் மோட்டார்சைக்கிளைச் செலுத்திச் சென்ற தந்தையும் காயமுற்றுள்ளனர்.

மேலும் விபத்தில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here