அமெரிக்காவில் காப்பகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உடல் கருகிப் பலியாகினர்.
அமெரிக்காவின் மாஸசூசெட் (Massachusetts) மாகாணத்தில் இயங்கி வரும் மருத்துவ காப்பகம் ஒன்றிலேயே இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர்.
50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அவ்விடத்திற்குச் சென்று, தீ பரவிய இடத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
காப்பக கதவுகளை உடைத்து, உள்ளே சிக்கி இருந்தவர்களை அவர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.
இருப்பினும், 9 பேர் உடல் கருகிப் பலியாகினர்.
30க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், இச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.



