மாலைதீவு அருகே வெள்ளிக்கிழமை (29) காலை இந்தியப் பெருங்கடலில் 4 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) குறிப்பிட்டுள்ளது.
முதலாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் 4.8 ரிச்டர் அளவில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து எற்பட்டுள்ள நிலநடுக்கங்கள் 5.2, 5.8 மற்றும் 5.0 ரிக்டர் அளவாக ஆக பதிவாகியுள்ளன.
இரண்டாவது மற்றும் நான்காவது நிலநடுக்கங்கள் (ரிக்டர் அளவு 5.2 மற்றும் 5.0) 10 கிலோ மீற்றர் ஆழத்திலும், மூன்றாவது நிலநடுக்கம் (5.8 ரிக்டர் அளவு) 7.7 கிலோ மீற்றர் ஆழத்திலும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.