தற்போது 5 வயது முதல் 50 வயது வரையில் அனைவருமே மூக்குக் கண்ணாடி அணிந்துள்ளனர்.
காரணம், பெரும்பான்மையானோர் கணினி, கையடக்கத் தொலைபேசி, மடிக்கணினி போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.
சிலருக்கு கண்ணாடி அணிவதென்பது எரிச்சலூட்டும் ஒரு விடயமாக இருக்கும்.
அப்படியானவர்கள் சில உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் காலப்போக்கில் கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே இருக்காது.
பச்சைக் காய்கறிகள் – பச்சை நிறக் காய்கறிகளில் லுடீன், ஜியாக்சாண்டின், விட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியுள்ளன.
இவை கண்களைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை தினமும் உண்பது மிகவும் நல்லது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு – விட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் போன்றவை சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அதிகமாக உள்ளது. மேலும் இதிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
கெரட் – கண்ணிலுள்ள புரதங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதனால் விழித்திரை ஒளியை உறிஞ்சுவதற்கு உதவி செய்கிறது.
மீன் – பொதுவாக மீன் உண்பது உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் இதிலுள்ள ஒமேகா 3 கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
உலர் பழங்கள் – உலர் பழங்களில் விட்டமின் ஈ சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதனை உண்பதன் மூலம் வயதாவதால் ஏற்படக்கூடிய கண் பாதிப்புக்களை தடுக்க முடியும்.
நட்ஸ் – பொதுவாகவே நட்ஸில் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் நட்ஸில் அடங்கியுள்ள விட்டமின் ஈ மற்றும் ஒமேகா 3 ஆகியவை கண்களுக்கு சிறந்த பலனைக் கொடுக்கும்.