January 13, 2026
இந்த ராசி பெண்கள் காதலியா கிடைச்சா ஜாக்பாட் தான்..?
ஜோதிடம்

இந்த ராசி பெண்கள் காதலியா கிடைச்சா ஜாக்பாட் தான்..?

May 28, 2024

கடகம்

கடக ராசியில் பிறந்த பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக இருப்பார்கள்.இவர்கள் இலகுவில் காதலில் விழுவது கிடையாது. ஆனால் காதல் செய்தால் நிச்சயம் நேர்மையானதும் உண்மையானதுமான துணையாக இருப்பார்கள்.

இந்த ராசி பெண்களால் மற்றவர்கள் வலியில் இருப்பதை பார்க்க முடியாது, எனவே அவர்கள் காதல் மற்றும் உறவுகளின் விஷயத்தில் மிகுந்த அக்கறையுடனும் விசுவாசமாகவும் இருப்பார்கள். இவர்கள் காதலியாக கிடைப்பது ஜாக்பாட் அடிப்பதற்கு சமனானது.

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் காதல் விடயத்தில் துணையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் தங்களின் துணைக்கு மிகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

இந்த ராசிக்காரர்கள் கடவுளுக்கு பயப்படக்கூடியவர்கள், எனவே துணைக்கு ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டார்கள். ரிஷப ராசி பெண்களை காதலியாக பெற்றவர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள்.

விருச்சிகம்

இந்த ராசியில் பிறந்த பெண்கள்  நேர்மையான மற்றும் விசுவாசமான பெண்களாக அறியப்படுகிறார்கள்.

இந்த ராசி பெண்கள் ஒரு தீவிர ஆளுமை கொண்டவர்களாகவும் ஆழமான அன்பை கொடுக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் காதலிப்பவரை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.உண்மையில் இவர்கள் காதலியாக கிடைத்தால் அதிஷ்டம் தான்.

கன்னி

கன்னி ராசியில் பிறந்த பெண்கள் இயல்பிலேயே மிகுந்த விசுவாசம் கொண்டவர்கள்.இவர்கள் ஒருபோதும் நம்பிக்கை துரோகம் செய்வது கிடையாது.  நேர்மையானவர்களாகவும், நம்பகத்தன்மையின் உருவமாகவும் இருப்பதால் சிறந்த காதலியாக இருப்பார்கள். இவர்களை காதலியாக பெற்ற ஆண்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *