கட்டாரில் நடைபெற்றுவரும் 2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி நேற்றைய தினம்(06) அஹமட் பின் அலி மைதானத்தில் நடைபெற்றிருந்தது.

இப்போட்டியில் ஜோர்டான் மற்றும் தென் கொரியா ஆகிய அணிகள் மோதியிருந்தன.

இப்போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜோர்டான் அணி வெற்றி பெற்று சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஜோர்டான் அணி சார்பாக யஷான் அல் நைமட் 53 ஆவது நிமிடத்திலும் மற்றும் முசா அல் டாமரி 66 ஆவது நிமிடத்திலும் ஒரு கோலைப் பெற்றனர்.

இன்றைய தினம் நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஈரான் மற்றும் கட்டார் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இப்போட்டி 8 30 மணி அளவில் டோஹாவிலுள்ள அல் துமாமா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here