Tamil News Channel

இலங்கையின் 15 ஆவது சனத்தொகை கணக்கெடுப்பு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

census & statistics

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட 15 ஆவது சனத்தொகை மற்றும் வீடமைப்புக் கணக்கெடுப்பானது இம்மாத இறுதியில் நிறைவடையவுள்ளதாக  அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கொழும்பு மாவட்டச் செயலாளர் கே.ஜி. விஜேசிறி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த கனக்கெடுப்பானது  எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

நாடு முழுவதும் மக்கள்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்புத் திட்டம் கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

மேலும், மக்கள் தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பினை மேற்கொள்ளும் போது, எங்கள் அதிகாரிகள் விவரங்களை சேகரிக்கும் போது பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.

சிலர் உதவிகரமாக இருந்தனர், சிலர் தங்கள் விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர். சில வீடுகள் மூடப்பட்டு, கதவுகள் பூட்டப்பட்டதால், உள்ளே நுழைவதில் சிரமம் ஏற்பட்டது.

இது ஒரு தேசிய ரீதியான செயற்றிட்டம் என்பதனால், திட்டம் தொடர்பான விவரங்களை அனைவரும் வழங்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

அவ்வாறு விவரங்களை வழங்க முடியாது என மறுக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts