Tamil News Channel

இலங்கையில் Laptop பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் கணினி கல்வியறிவு 39 வீதமாக அதிகரித்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு கணனி கல்வியறிவு கணக்கெடுப்பு அறிக்கையின்படி, இலங்கையில் 05 முதல் 69 வயதுக்கு இடைப்பட்ட ஐந்தில் இருவர் கணினி அறிவு பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஐந்தில் மூன்று பேருக்கு டிஜிட்டல் கல்வியறிவு இருப்பதாகவும், இது 63.5 சதவீதமாக உள்ளது எனவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் 20.2 வீதமான குடும்பங்கள் Desktop அல்லது Laptop பயன்படுத்துகின்றனர் எனவும் நகர்ப்புற மக்களின் கணினி மற்றும் டிஜிட்டல் கல்வியறிவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டளவில், கணினி கல்வியறிவு 4.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் அதிகபட்ச கணினி கல்வியறிவு 52.9 சதவிகிதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts