நாட்டில் தீங்கு விளைவிக்கும் அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தி பக்கவிளைவுகளுடன் பொது மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக உள்ளூர் சந்தையில் இவ்வாறான தயாரிப்புகள் பயன்படுத்துவதனை கட்டுப்படுத்துவது பாரிய சவாலாகியுள்ளதென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவற்றில் அதிக எண்ணிக்கையிலான தயாரிப்புகள் தீங்கு விளைவிக்கும் வெண்மையாக்கும் கிரீம்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களாகும்.
அவை எந்தவொரு சிறப்பு அதிகாரத்திலும் பதிவு செய்யப்படவில்லை மற்றும் பயனர்களுக்கு ஒவ்வாமை மற்றும் மரணம் கூட ஏற்படுத்தும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் அவற்றினை பயன்படுத்தும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.