உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை (30/05/2025) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
நேற்று மாலை யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]