இலங்கை ஒரு மிக நெருக்கமான நட்பு நாடு என்று தெரிவித்துள்ள ஈரான், இலங்கைக்கு தேவையான எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கத் தான் எப்போதும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
சர்வதேச வர்த்தகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் (Hormuz) கடல்வழி வர்த்தகப் பாதையானது, நட்பு நாடுகளின் கப்பல் போக்குவரத்திற்கு ஒருபோதும் மூடப்படவில்லை என்று ஈரான் தரப்பு விளக்கியுள்ளது.
இதன் காரணமாக, இலங்கை போன்ற நட்பு நாடுகளின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கான வசதிகள் தடையின்றி உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இலங்கை அரசு எரிபொருள் (Oil) அல்லது பிற அத்தியாவசியப் பொருட்களைக் கோரினால், அவற்றை இலங்கைக்கு விநியோகிக்க ஈரான் முழு முனைப்புடன் செயல்படும். இலங்கை மக்கள் எவ்விதத் துன்பத்திற்கும் ஆளாவதை ஈரான் விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் அதன் மக்கள் ஈரானுக்கு மிகவும் மதிப்பிற்குரிய மற்றும் மரியாதைக்குரியவர்கள் என்று ஈரான் புகழாரம் சூட்டியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நீண்டகால நட்புறவின் அடிப்படையில், இலங்கையின் பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்ய ஈரான் உறுதியளித்துள்ளது.








