July 8, 2025
இஸ்ரேலை எச்சரித்த ஈரான் ஜனாதிபதி
News News Line Top புதிய செய்திகள்

இஸ்ரேலை எச்சரித்த ஈரான் ஜனாதிபதி

Jan 22, 2024

சிரியாவின் குடியிருப்பு மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எச்சரித்துள்ளார்.

சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்நாட்டில் ஆலோசனைக் கடமைகளில் ஈடுபட்டிருந்த ஈரானிய உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் 5 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஈரானும் சிரியாவும் குற்றஞ்சாட்டி உள்ளதாகவும், இஸ்ரேல் இது குறித்து கருத்து தெரிவிக்காமல் மௌனம் காத்து வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையிலேயே சிரியாவில் மக்கள் வசிக்கும் பகுதியில் வான்வழித் தாக்குதலில் ஈரான் புரட்சிப் படையின் மூத்த அதிகாரிகள் 5 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானுடன் தொடர்புடைய சிரிய இலக்குகள் மீது பல ஆண்டுகளாக இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருவது அனைவரும் அறிந்த உண்மை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *